Tuesday, July 30, 2013

கா(த)வலன்

கா(த)வலன் 

என் தேவதையே
நீ எங்கே செல்கிறாய் 
உன் நிழலும்கூட என்னை அழைக்குதடி 

சிணுங்கும் உன் 
கொலுசின் ஒலிகள் உன்னை 
என்னிடம் அறிமுகம் செய்யுதடி

உன் கார்மேக கூந்தலின் நறுமணத்தில்
தொலைத்து விட்டேன் என்னை

மேகமே அசந்து போகும் உன் கருவிழிகள் 
என் இதயத்தை துண்டு துண்டாய் செதுக்குதடி 

உன் மூக்கின் நுனியில் விழுந்த மழைத்துளி
என்னை பருகிட சொல்லுதடி

உன் உதட்டோரம் சிந்திடும் உணவும்
என் உதடோடு சேர்ந்திட துடிக்குதடி

உன் இடையில் விழும் மடிப்பில்
என் கைகள் படர்ந்திட துடிக்குதடி

என்னவளே 
உன் பாதச்சுவட்டில் 
தொலைத்துவிட்டேன் என் முகவரியை

என்னவளே  
உன் மூச்சுகாற்றில் 
இழந்துவிட்டேன் என் இதயத்துடிப்பை

என் சுவாசமே 
கேட்கிறேன்
உன்னையே என் உயிராக

தருவாயா 
உனை எனக்கென
தந்தேனே எனை உனக்கென

உனக்கென உன் நினைவில்
உனக்கென உன் சுவாசத்தில் 
வாழும் உன் கா(த)வலன்

                                                             அன்புடன் 
                                                     ஆனந்த் கி லிங்கம் 

No comments:

Post a Comment