ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு
இது ஏதோ ஒரு கவிஞன்
மரத்தடி நிழலில் அமர்ந்து
தென்றல் காற்றில் தனைமறந்து
படைத்த காவியம் அல்ல
எங்கள் காவியம்
பள்ளி செல்லும் குழந்தை
தன் இன்பம் தொலைத்து
தன் உறவை பிரிந்து
அடுத்த தலைமுறையேனும்
சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமென்று
நெஞ்சம் கனலாய் எரிய
தமிழ் ஈழம் கனவை நெஞ்சிலே தாங்கி
புத்தக சுமையை இறக்கி
தோளிலே துப்பாக்கி சுமந்து
கழுத்திலே நஞ்சு குப்பியை ஏந்தி
மாவிரனாய் போரிட்டு
மார்பிலே குண்டு தாங்கி
கல்லறையில் விதைகளாய்
விதைக்க பட்டிருக்கும் மாவீரரின்
குருதியில் எழுதிய காவியம்
ஆம் எம் காவியம்
நிலவில் பேனா வாங்கி
வானத்தில் மை எடுத்து
மேகத்தில் எழுதியதல்ல
எம் மாவீரரின் குருதி எடுத்து
ஈழ தமிழரின் நெஞ்சிலே
எழுதப்பட்ட அல்ல இது
விதைக்க பட்ட காவியம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அன்புடன்
ஆனந்த் கி லிங்கம்
No comments:
Post a Comment