காதல் மயக்கம்
கதிரவனின் கதிர்கள் கடலில் சங்கமிக்கும் நேரம்
நட்சத்திரங்களின் ஒளி விண்ணில் படரும் நேரம்
நீயே நானாய் மாறிப்போன மாலை நேரம்
உன் கண்களில் அழகு முத்தம் பதித்து
உன் இதழில் புதுக்கவிதை நான் பாடி
உன் கன்னத்தில் செல்லக்கடி நான் கடித்து
என் விரல்களால் உன் கழுத்தில் கோலமிட்டு
உன் இடையில் காதல் மொழி நான் படித்து
உன் மடியில் சிறு துயில் கொள்ள
உன் பூ முகம் மலர நீ நான்
நாம் என்று ஒன்றாய் சங்கமிக்கும்
இந்த மயக்கும் மாலை வேளையில்
நான் கொண்டேன் காதல் மயக்கம் உன்மீது
Fall In Love With You Sweetie
அன்புடன்
ஆனந்த் கி லிங்கம்
No comments:
Post a Comment