Monday, July 15, 2013

திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன்


முதன் முதலாய் உன் கண்களின் பார்வை
என்னில் விழுந்தபோது என்னுள் சில மாற்றம் 
அதை திரும்பி பார்கிறேன்

சில்லென்ற தென்றலில் அலைவீசி ஆடிய 
உன் கார்மேக கூந்தல்

குளிர்ந்த இரவில் ஒளிவீசிடும் 
பிறைவடிவ நெற்றி

கடித்து பார்க்க சொல்லும் 
உன் கூரிய மூக்கு 

முத்தம் கேட்டு ஏங்கி நிற்கும் 
உந்தன் பூவிதழ்கள்

மோகம் ததும்பி நிற்கும் 
உன் கன்னம்

இத்தனை அழகையும் தாங்கிநிற்கும் 
பௌர்ணமி நிலா போன்ற உன் முகம்

உன்னை பார்கிறேனா ரசிக்கிறேனா 
என்ற அந்த தேடலுடன் 

ஒரு நிமிடம் கண்மூடினேன் 
அப்போதுதான் என்னில் தோன்றியது 

நீ
எனக்காக பிறந்தவளோ என்று
அந்த ஒரு நிமிடத்தை திரும்பி பார்க்கிறேன்


                                         I Love You My Cute Angel
                                                                                                         அன்புடன்
                                                                                                   ஆனந்த் கி லிங்கம்

No comments:

Post a Comment