Tuesday, July 30, 2013

கா(த)வலன்

கா(த)வலன் 

என் தேவதையே
நீ எங்கே செல்கிறாய் 
உன் நிழலும்கூட என்னை அழைக்குதடி 

சிணுங்கும் உன் 
கொலுசின் ஒலிகள் உன்னை 
என்னிடம் அறிமுகம் செய்யுதடி

உன் கார்மேக கூந்தலின் நறுமணத்தில்
தொலைத்து விட்டேன் என்னை

மேகமே அசந்து போகும் உன் கருவிழிகள் 
என் இதயத்தை துண்டு துண்டாய் செதுக்குதடி 

உன் மூக்கின் நுனியில் விழுந்த மழைத்துளி
என்னை பருகிட சொல்லுதடி

உன் உதட்டோரம் சிந்திடும் உணவும்
என் உதடோடு சேர்ந்திட துடிக்குதடி

உன் இடையில் விழும் மடிப்பில்
என் கைகள் படர்ந்திட துடிக்குதடி

என்னவளே 
உன் பாதச்சுவட்டில் 
தொலைத்துவிட்டேன் என் முகவரியை

என்னவளே  
உன் மூச்சுகாற்றில் 
இழந்துவிட்டேன் என் இதயத்துடிப்பை

என் சுவாசமே 
கேட்கிறேன்
உன்னையே என் உயிராக

தருவாயா 
உனை எனக்கென
தந்தேனே எனை உனக்கென

உனக்கென உன் நினைவில்
உனக்கென உன் சுவாசத்தில் 
வாழும் உன் கா(த)வலன்

                                                             அன்புடன் 
                                                     ஆனந்த் கி லிங்கம் 

Thursday, July 25, 2013

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு

இது ஏதோ ஒரு கவிஞன்
மரத்தடி நிழலில் அமர்ந்து
தென்றல் காற்றில் தனைமறந்து
படைத்த காவியம் அல்ல

எங்கள் காவியம்
பள்ளி செல்லும் குழந்தை
தன் இன்பம் தொலைத்து
தன் உறவை பிரிந்து
அடுத்த தலைமுறையேனும்
சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமென்று

நெஞ்சம் கனலாய் எரிய
தமிழ் ஈழம் கனவை நெஞ்சிலே தாங்கி
புத்தக சுமையை இறக்கி
தோளிலே துப்பாக்கி சுமந்து
கழுத்திலே நஞ்சு  குப்பியை ஏந்தி

மாவிரனாய் போரிட்டு
மார்பிலே குண்டு தாங்கி
கல்லறையில் விதைகளாய்
விதைக்க பட்டிருக்கும் மாவீரரின்
குருதியில் எழுதிய காவியம்

ஆம் எம் காவியம்
நிலவில் பேனா வாங்கி
வானத்தில் மை எடுத்து
மேகத்தில் எழுதியதல்ல

எம் மாவீரரின் குருதி எடுத்து
ஈழ தமிழரின் நெஞ்சிலே
எழுதப்பட்ட அல்ல இது
விதைக்க பட்ட காவியம்

                                       தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

                                                                      அன்புடன்
                                                           ஆனந்த் கி லிங்கம்

Wednesday, July 24, 2013

காதலெனும் போலி மயக்கம்

காதலெனும் போலி மயக்கம்

காதல் 
ஆணும் பெண்ணும் 
ருசிப்பதற்கு அல்ல

காதல் 
ஆணை பெண்ணும்
பெண்ணை ஆணும் ரசிப்பதற்கு

காதல் 
அன்பை இருவர்
பகிர்ந்து கொள்வதற்கு 

ஆணும் பெண்ணும் ருசிப்பதற்குதான் 
திருமணம் என்ற பந்தத்தை 
தமிழ் கலாச்சாரம் தந்திருக்க

பின்பு ஏன்தான்
காதலையும் காமத்தையும் கலந்து
காதலின் புனிதத்தையும் காமத்தின் 
புரிதலையும் கொச்சை படுத்துகிறார்களோ


                       "Love Is Not Blind, Some Peoples Try To Make It As Blind"

                                                                               அன்புடன் 
                                                                         ஆனந்த் கி லிங்கம்

Monday, July 22, 2013

காதல்

காதல்
 
உன் 
நெஞ்சில் நீ 
எனை சுமக்க

                               என் 
                               தோழில் நான் 
                               உனை சுமக்க

                                                                உனக்கும் 
                                                                எனக்குமான ஊடலை 
                                                                இறைவன் வகுத்தான் காதலென்று


                                                                                                              அன்புடன்
                                                                                                        ஆனந்த் கி லிங்கம்

Friday, July 19, 2013

காதல் மயக்கம்

காதல் மயக்கம்

கதிரவனின் கதிர்கள் கடலில் சங்கமிக்கும் நேரம்
நட்சத்திரங்களின்  ஒளி விண்ணில் படரும் நேரம்
நீயே நானாய் மாறிப்போன மாலை நேரம்

உன் கண்களில் அழகு முத்தம் பதித்து
உன் இதழில் புதுக்கவிதை நான் பாடி

உன் கன்னத்தில் செல்லக்கடி நான் கடித்து
என் விரல்களால்  உன் கழுத்தில் கோலமிட்டு

உன் இடையில் காதல் மொழி நான் படித்து
உன் மடியில் சிறு துயில் கொள்ள

உன் பூ முகம் மலர நீ நான் 
நாம் என்று ஒன்றாய் சங்கமிக்கும்

இந்த மயக்கும் மாலை வேளையில்
நான் கொண்டேன் காதல் மயக்கம் உன்மீது


                                                  Fall In Love With You Sweetie

                                                                            அன்புடன்
                                                                  ஆனந்த் கி லிங்கம்

Thursday, July 18, 2013

உண்மை காதலை உணர்கிறேன்

உண்மை காதலை உணர்கிறேன்

என் காலில் சிறு கல் விழுந்தபோது
கண்கள் கலங்கிப்போன என் அவள்

செல்லமாக என் மீது கோபம் கொண்டு
பட்டுபோல் மென்மையான அவள் கைகள் நோக
போலியாக என்னை வலிசெய்து
என் நெஞ்சில் அவள் சாய்ந்தபோது

என் கண்களில் கண்ணீர் பொங்கி எழ
அதை மறைக்க கூட முடியாமல்
அவள் நெற்றியில் அன்பு முத்தம் பதித்து
உருகிபோனேன் என்னவளின் காதலில்

பெண்களின் காதல் உன்னதமானதென்று
யாரோ சொன்னது உண்மைதானென
உணர்கிறது என் உள் மனது
அவளின் அன்பில் மூழ்கி தவிக்கும் இத்தருணம்

                                                                    I Love You Babiee

                                                                                                         அன்புடன்
                                                                                               ஆனந்த் கி லிங்கம்

Wednesday, July 17, 2013

காதல் மலரே

காதல் மலரே

கண்மூடி தூங்கினேன்
கனவாக நீ இருந்தாய்

கண்விழித்து பார்க்கிறேன்
நினைவாகவும் நீயே இருக்கிறாய்

எனது ஒவ்வொரு துளி அசைவிலும் 
உனது புன்னகை ஒளி சிந்துகிறாய்

நீ மலரென இருப்பது கண்டு
காதலெனும் தேன் பருக 

உன் மலரடி தேடி 
தினம் தினம் வருகிறேன்

உன் பார்வை என் மீது
விழும் தருணம் எப்போதடி பெண்ணே


                                                         I Love You Honey

                                                                                                           அன்புடன்
                                                                                                    ஆனந்த் கி லிங்கம்